திருச்சியில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்
திருச்சியில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.;
திருச்சியில் உள்ள திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளை முன்னிட்டு தியாகிகளின் உருவப் படத்திற்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாநகர செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், கதிரவன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம், விஜயா ஜெயராஜ் பகுதி செயலாளர் கண்ணன் காஜாமலை விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.