திருச்சி விமான நிலையத்தில் ரூ.28.69 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.28.69 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இன்று பயணிகள் வந்து சேர்ந்தனர். அப்போது விமானத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணி பசை வடிவிலான 3 தங்க கட்டிகளை கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து தங்கம் 586.500 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதன் மதிப்பு ரூ.28.69 லட்சம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.