ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை தி.மு.க.வினர் அபகரிக்க முயற்சிப்பதாக புகார்

ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை தி.மு.க.வினர் அபகரிக்க முயற்சிப்பதாக திருச்சி சரக டி.ஐ.ஜி.யிடம் புகார் செய்யப்பட்டது.;

Update: 2022-01-04 09:27 GMT
நிலம் அபகரிப்பு பற்றி பேட்டி அளித்த விவசாயி.

கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள மீனாட்சி புரத்தை சேர்ந்தவர் விஜயராகவன். இவர்  திருச்சி சரக டி.ஐ.ஜி.சரவணசுந்தரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

கடவூரில் எனக்கு ரூ.2 கோடி மதிப்பில் 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை தி.மு.க.பிரமுகர்கள். சிலர் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து நிலத்தை அபகரிக்க முயற்சிக்கின்றனர். இது தொடர்பாக திருச்சி சரக டி.ஐ.ஜி அலுவலகத்தில் ஏற்கனவே கடந்த 31-ந் தேதி புகார் அளித்ததன் பேரில் கீரனூர் கிராமத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அதன் பின்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அனைவரும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் காவல்துறையினர் மேல் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். என்னை கடத்தி கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். ஆகவே சம்பந்தப்பட்ட வர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News