வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஒத்தி வைப்பு
திருச்சியில் இன்று நடக்க இருந்த வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது;
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெறுவதாக இருந்த அனைத்து அரசுத் துறைகளின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..