2 தடுப்பூசி போட்ட திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமாருக்கு கொரோனா
2 தவணை தடுப்பூசி செலுத்திய பின்பும் திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன் களப்பணியாளர், சுகாதாரப் பணியாளர்கள், இணை நோயுள்ள 60 வயதை கடந்தவர்களுக்கான கொரோனா 3-வது தவணை (பூஸ்டர்) தடுப்பூசி போடும் பணி கடந்த 10-ந் தேதி தொடங்கியது.அப்போது அங்கு கலெக்டர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் என்னும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமாரும் பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிவுகள் வெளியானதில், அவருக்கு தொற்று உறுதியானது. பெரிய அறிகுறிகள் ஏதும் இல்லாததாலும், ஏற்கனவே அவர் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதாலும், அவர் முகாம் அலுவலகத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.