ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்
ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது.
ஓய்வுபெற்ற கிராம உதவியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் லெட்சுமணன் தலைமை தாங்கினார். மாநில தலைமை நிலைய செயலாளர் மதனகோபால் வரவேற்று பேசினார். இதில் மாநில அமைப்பு செயலாளர் ஜேம்ஸ் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் சின்னப்பன், மாநில செயலாளர்கள் பொன்னுசாமி, மோகன், சத்தியசீலன், கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் மாநில பொருளாளர் ஈஸ்வரன் நன்றி கூறினார்.
தமிழகத்தில் ஓய்வுபெற்ற கிராம உதவியாளர்கள் 15 ஆயிரம் பேர் உள்ள நிலையில் நாங்கள் அரசால் வழங்கப்படும் பென்ஷன், இன்கிரிமெண்ட் உள்ளிட்ட இதர சலுகைகள் அனைத்தும் நான்காம் நிலைக்கு கீழ் பெற்று வருகிறோம். இதனை மாற்றி அரசு ஊழியர்களில் டி கிரேடு, ஓ.ஏ, ஸ்கேல் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற கிராம உதவியாளர்களுக்கு அரசு மருத்துவ மனைகளில் வைத்தியம் செய்து கொள்ள அனைவருக்கும் மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும். ஓய்வுக்குப் பின் இறப்பு நேரிட்டால் மற்ற ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப் போல் தங்களது குடும்பத்தாருக்கும் பணப் பயன்கள் வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டதிலும் உள்ளவர்களுக்கு ஒரே மாதிரியான அளவில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.