அகவிலைப்படியை உடனே வழங்க ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
அகவிலைப்படியை உடனே வழங்க ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் (நடவடிக்கை குழு) திருச்சி தெற்கு மாவட்ட பேரவை கூட்டம் மாவட்டத் தலைவர் அருள்ஜோஸ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் மாரிமுத்து அறிக்கை தாக்கல் செய்தார். இந்த கூட்டத்தில் மாநில தலைவர் ராமானுஜம், மாநில பொதுச்செயலாளர் துரைக்கண்ணு, மாநில பொருளாளர் ஜோதி பிரகாஷ் ஆகியோர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இந்த கூட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 1-1 -2022 முதல்,அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி 70 வயது முதிர்ந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புநிதியை ரூ50ஆயிரத்தில் இருந்து ரூ.2 ல ட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும், காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பணமில்லா மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.