இந்திய ரிசர்வ் வங்கி நட்சத்திர வரிசை ரூபாய் பணத்தாள்கள் கண்காட்சி
இந்திய ரிசர்வ் வங்கி நட்சத்திர வரிசை ரூபாய் பணத்தாள்கள் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கி நட்சத்திர வரிசை ரூபாய் பணத்தாள்கள் குறித்த சிறப்பு கண்காட்சி நிகழ்ச்சி திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நூலகத்தில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவன தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். நாணயவியல் மற்றும் பணத்தாள்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர் இந்திய ரிசர்வ் வங்கி நட்சத்திர வரிசை ரூபாய் பணத்தாள்கள் குறித்து பேசுகையில்,
இந்திய ரிசர்வ் வங்கி நட்சத்திர வரிசை ரூபாய் பணத்தாள்களை வழக்கமான பணத்தாள்களில் பிழை மற்றும் குறைபாடு ஏற்படின் அதே எண்ணில் நட்சத்திர வரிசையுடன் வெளியிடப்படும். இவை வழக்கமான ரூபாய் பணத்தாள்களைப் போலவே இருக்கும், ஆனால் முன்னோட்டுக்கும் வரிசை எண்ணுக்கும் இடையே உள்ள எண் பேனலில் கூடுதல் எழுத்து, அதாவது பணத்தாள் தொடரில் உள்ள அதே எண் முன்பு நட்சத்திர குறியீடு எண்கள் இடம் பெற்றிருக்கும். நட்சத்திர தொடர் எண்ணைக் கொண்ட ரூபாய் பணத்தாள்களை சட்டப்பூர்வமாக பொதுமக்கள் பயன்படுத்தலாம் என்றார்.
முன்னதாக செயலர் குணசேகரன் வரவேற்க, கமலக்கண்ணன் நன்றி கூறினார்.