பருப்பு மீதான 5 சதவீத வரியை ரத்து செய்ய முதல்வருக்கு கோரிக்கை

பருப்பு மீதான 5 சதவீத வரியை ரத்து செய்ய முதல்வருக்கு திருச்சி மாவட்ட வியாபார கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-07-01 14:47 GMT

திருச்சி மாவட்ட வியாபார கழகத்தின் செயலாளர் எம். தங்கராஜ் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி. 47 வது கவுன்சில் கூட்டத்தில் பருப்பு வகைகளுக்கு குறிப்பாக அரிசி, பருப்பு, கோதுமை ஆகியவற்றிற்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட உணவுகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் பருப்பு வகைகளுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டு இருப்பதால் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை கடுமையாக உயரும். இதனால் ஏழை எளிய நடுத்தர வர்க்க  மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஆதலால் இந்த வரியை ரத்து செய்து பருப்பை மீண்டும் விரி விலக்கு பொருட்களுக்கான பட்டியலில் சேர்க்க உத்தரவிடும்படி கேட்டுக்கொள்கிறோம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News