காவல் துறையினரை கண்காணிக்க சிறப்பு நுண்ணறிவு பிரிவு அமைக்க கோரிக்கை

தமிழகத்தில் காவல் துறையினரை கண்காணிக்க சிறப்பு நுண்ணறிவு பிரிவு அமைக்க வேண்டும் என முதல்வருக்கு எச்எம்கேபி மாநில செயலாளர் கோரிக்கை வைத்துள்ளார்.

Update: 2023-10-08 10:00 GMT

எச்.எம்.கே.பி. மாநில செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி

குற்றச்செயல்களில் ஈடுபடும் காவல் துறையினரை கண்காணிக்க சிறப்பு நுண்ணறிவு பிரிவு ஏற்படுத்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு எச்.எம்.கே.பி. மாநில செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி கோரிகை விடுத்துள்ளார்.

இது குறித்து ஹிந்த் மஸ்தூர் விவசாய தொழிலாளர் அமைப்பின் (எச்.எம்.கே.பி) மாநில செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி மாவட்டம் முக்கொம்பில் காதலனுடன் சுற்றுலா சென்ற சிறுமியை தனியாக கடத்தி சென்று சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் நான்கு போலீசாரே பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் காவல் துறையினருக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்புயை காவல் துறையினரை துரித நடவடிக்கை எடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை உடனடியாக கைது செய்து உள்ளார்.அதற்காக அவரை பாராட்டுகிறேன்.

தமிழகம் முழுவதும் காவல் துறையில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் சுமார்  40சதவீதம் போலீசார் குற்றப்பின்னணி கொண்டவர்களாக உள்ளனர். இதற்கு காரணம் காவல் துறையில் அரசியல் தலையீடும் ஒரு காரணம். அரசியல் கட்சிகளின் வட்ட செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை காவல் துறையினரை மிரட்டுகிறார்கள். இதன் காரணமாக அவர்களும் அரசியல் கட்சியினருக்குஅடி பணிந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காவல் துறையில் இதுபோன்ற கருப்பு ஆடுகளை கண்டு பிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் விடியல் அரசிற்கு இவர்களால் கெட்ட பெயர் வந்து விடும். தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது காவல் துறையினரை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார். அதே போல் முதல்வர் அவர்களும் காவல் துறையினரை தனது நேரடி கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர  வேண்டும். காவல் துறையில் தவறிழைக்கும் காவலர் முதல் அதிகாரிகள் வரையிலானவர்களை கண்டு பிடித்து நடிவடிக்கை எடுக்க சிறப்பு நுண்ணறிவு பிரிவினை ஏற்படுத்த வேண்டும்.

திருச்சி முக்கொம்பில் காவல் துறையினரால் பாலியல் ரீதியாக  பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News