பொன்மலை ரயில் நிலையத்திற்கு மீண்டும் பேருந்துகள் இயக்க கோரிக்கை
பொன்மலை ரயில் நிலையத்திற்கு மீண்டும் பேருந்துகள் இயக்க மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
பொன்மலைக்கு வரும் அனைத்து பஸ்களும் பொன்மலை ரயில் நிலையம் வழியாக செல்ல வேண்டும் என வழியுறுத்தி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
திருச்சி பொன்மலை ரயில் நிலையம் திருச்சி ரயில்வே கோட்டத்தி்ல் உள்ள ஒரு முக்கியமான ரயில் நிலையமாகும். காரணம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் ரயில்வே மேலதிகாரிகள் இந்த பகுதியில் தான் வசித்து வந்துள்ளார்கள். மேலும் பொன்மலை ரயில்வே பணிமனையும் இங்கு தான் அமைந்துள்ளது. அந்த வகையில் பொன்மலை ரயில்நிலையத்தை சார்ந்துள்ள பணிமனை, சுற்றுவட்டார கிராமங்கள் ஆகியவை இயற்கை எழில் சூழ்ந்த ஒரு தனி உலகமாகவே கருதப்பட்டு வருகிறது.
திருச்சியிருந்து பொன்மலைக்கு வரும் பேருந்துகளும், பொன்மலையிருந்து திருச்சி வரும் பஸ்களும் இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை பொன்மலை ரயில் நிலையம் சென்று வந்து கொண்டு இருந்து. தற்பொமுது பொன்மலை ரயில் நிலையம் வராமல் நேராக செல்கின்றன. இதனால் ரயிலில் பயணிக்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் உட்பட அனைத்து பயணிகளும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.
இதனை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்ட மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பொன்மலை வரும் அனைத்து பஸ்களும் பொன்மலை ரயில் நிலையம் வழியாக வந்து செல்ல வேண்டும் என கோரி மனு அளிக்கப்பட்டு உள்ளது.