திருச்சி மகளிர் சிறையில் துப்புரவு பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டுகோள்

திருச்சி மகளிர் சிறையில் துப்புரவு பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2023-10-05 16:53 GMT

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

திருச்சிராப்பள்ளி மகளிர் தனிச்சிறையில் காலியாக உள்ள ஒரு துப்புரவு பணியாளர்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

இப்பணியிடத்திற்கான கீழ்க்கண்ட தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

1).கல்வி தகுதி: தமிழில் எழுதுவதற்கும், பேசுவதற்கும் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

2).இட ஒதுக்கீடு: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் -பெண்கள்

3).வயது வரம்பு: 01.07.2023 அன்று குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

4). ஊதிய விகிதம் : ரூ.15700-58100- ஆகும்.

தகுதியுள்ள மேற்குறிப்பிட்ட வகுப்பினர் மட்டும் கீழ்க்கண்ட முகவரிக்கு கீழ்க்காணும் ஆவணங்களின் நகல்களுடன் 31.10.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவண நகல்கள்:

சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று,

கல்வி சான்று(இருப்பின்).

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

சிறை கண்காணிப்பாளா;, மகளிர் தனிச்சிறை, காந்தி மார்க்கெட் காவல் நிலையம் அருகில், திருச்சி-620008. என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தொpவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார்தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News