திருச்சியில் பள்ளி மாணவர்களுக்காக கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

பள்ளி மாணவ, மாணவிகளுக்காக அரசு பஸ்கள் கூடுதலாக இயக்க மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.;

Update: 2022-03-07 15:30 GMT

அரசு பஸ்கள் கூடுதலாக இயக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில பொது செயலாளர் ஷாஜகான் தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

பள்ளி மாணவர்கள், பஸ் ஸ்டாப்களில் நிற்கும் மாணவர்களை ஏற்றி செல்ல பஸ் ஸ்டாப்களில் நிற்காமல் கொஞ்சம் துரம் சென்று அரசு மற்றும் தனியார் பஸ் நிற்பதனால் மாணவர்கள் புத்தக பேக்கை துக்கி கொண்டு பஸ்ஸில் ஓடி சென்று ஏறும் போது நிலை தடுமாறி கீழே விழும் சூழல் உள்ளது.

ஆகவே அரசு மற்றும் தனியார் பஸ்கள் முறையாக பஸ் ஸ்டாப்களில் நின்று பள்ளி மாணவர்களை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவர்களை ஏற்றி செல்ல அரசு மற்றும் தனியார் பஸ்கள் சரியான நேரத்திற்கு பஸ் ஸ்டாப்களுக்கு வராமல் தாமதிப்பதனால் பள்ளி மாணவர்கள் சரியான நேரத்திற்கு பள்ளி செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ஆகவே பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வர அரசு பஸ்களை கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூடுதலாக பயணிகளை ஏற்றி செல்லும் பஸ்கள் மீதும், படிகட்டில் நின்று பயணம் மேற் கொள்பவர்கள் மீதும் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News