திருச்சியில் விவசாயிகள் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் குடியரசு தினவிழா
திருச்சியில் விவசாயிகள் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.;
நாட்டின் 73 ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த வகையில் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பு (ஹெச்.எம்.கே பி) சார்பில் திருச்சி காஜாமலை ஹெச்.எம்.கே.பி மாநில செயலாளர் அலுவலகம் முன்பு குடியரசு தினவிழா நடந்தது.
சிறப்பு விருந்தினராக திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்டு கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவுக்கு மாநிலச் செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி தலைமை வகித்தார். விழாவில் அனைத்திந்திய வறுமைக்கோட்டு முன்னேற்ற கழக திருச்சி மாநகர குழு தலைவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.