குடியரசு தின நாளில் விடுமுறை அளிக்காத 104 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

குடியரசு தின விடுமுறை நாளில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 104 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-01-27 06:17 GMT

பைல் படம்.

திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (சட்ட அமலாக்கம்) தங்கராசு தலைமையில், தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்களுடன் நேற்று விடுமுறை தினமான குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 147 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத 104 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இனிவரும் தேசிய விடுமுறை நாட்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும். தேசிய விடுமுறை நாட்களில் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்காமல் பணிபுரிய நிர்ப்பந்திக்கும் வர்த்தக நிறுவனங்கள் மீது 1958-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை) சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (சட்ட அமலாக்கம்) தங்கராசு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News