திருச்சி ரெங்கா நகரில் குடியரசு தினவிழா- நலச்சங்க கட்டிடம் திறப்பு

திருச்சி ரெங்கா நகரில் குடியரசு தினவிழா மற்றும் நலச்சங்க கட்டிடம் திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.;

Update: 2023-01-26 13:57 GMT

திருச்சி ரெங்காநகரில் குடியரசு தினவிழா உரையாற்றினார் பிஷப் ஹீபர் கல்லூரி இயக்குனர் சுவாமி ராஜ்.

திருச்சி ரெங்கா நகரில் குடியரசு தினவிழா மற்றும் நலச்சங்க புதிய கட்டிடம் திறப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி 25வது வார்டு உய்ய கொண்டான் திருமலை அருகே உள்ளது ரெங்காநகர். திருச்சி மாநகரில் வளர்ந்து வரும் பகுதியாக ரெங்காநகர் உள்ளது. ரெங்காநகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் இன்று காலை நாட்டின் 74வது குடியரசு தினவிழா மற்றும் நலச்சங்கத்திற்கு புதிதாக கட்டப்பட்ட அலுவலக கட்டிடம் திறப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், இயக்குனருமான சுவாமி ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து திருச்சி மூத்த வழக்கறிஞர் என்.ஆர். முருகேசன் தானமாக வழங்கிய இடத்தில்  கட்டப்பட்ட ரெங்காநகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் புதிய கட்டிட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை முன்னாள் தலைமை பொறியாளரும், தமிழக அரசின் சிப்காட் தொழில் நுட்ப ஆலோசகருமான தங்க பிரகாசம் முன்னிலை வகித்தார். இடத்தை தானமாக வழங்கிய வழக்கறிஞர் என்.ஆர். முருகேசன் புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.

புதிதாக திறக்கப்பட்ட சங்க அலுவலக கட்டிடத்தில் பொதுப்பணித்துறை முன்னாள் தலைமை பொறியாளர் தங்க பிரகாசம் குத்து விளக்கு ஏற்றினார்.

இந்தவிழாவில் ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் இருதயசாமிக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

விழாவில் சங்க தலைவர் அழகன், செயலாளர் தமிழரசன், பொருளாளர் முத்து கிருஷ்ணமூர்த்தி உள்பட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் சங்க உறுப்பினர்கள், குடியிருப்பு வாசிகள், பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News