திருச்சி மலைக்கோட்டை உச்சியில் தேசியக்கொடி ஏற்றம்
குடியரசு தின விழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சியில், தேசியக்கொடி ஏற்றப்பட்டது.;
இந்தியாவின் 73- வது குடியரசு தினத்தை முன்னிட்டு, இன்று காலை திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில், தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலர் த.விஜயராணி தலைமையில் மலை உச்சியில் 273 அடி உயரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இதில் கண்காணிப்பாளர், ஆய்வாளர் மற்றும் கோயில் பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.