திருச்சியில் நடந்த மத நல்லிணக்க தீபத்திருநாள் விழா

திருச்சியில் மத நல்லிணக்க தீபத் திருநாள் விழா நடைபெற்றது.;

Update: 2021-11-06 05:48 GMT

திருச்சியில் மத நல்லிணக்க  தீபாவளி பண்டிகை  கொண்டாடப்பட்டது.

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, காவேரி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில்  நல்லிணக்க தீபத் திருநாள் நகராட்சி பூங்கா அருகில் கொண்டாடப்பட்டது. முன்னாள் துணை கலெக்டர் சத்தியவாகீஸ்வரன் தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் சுந்தர்ராஜ் நகர் சுந்தர விநாயகர் கோவில் குருக்கள் ராஜ்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோருக்கு திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை துணைத்தலைவர் மௌல்வி அப்துல் ரஹீம், சலாஹிய பள்ளிவாசல் ஜமாத் உறுப்பினர் முன்னாள் பேராசிரியர் முஹம்மது காசிம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து தீபாவளி வாழ்த்து கூறினர்.

விழாவில் முன்னாள் சுகாதாரத்துறை அதிகாரி  உத்தமன், கிறிஸ்தவ பிரமுகர் சார்லஸ், சலாஹியா பள்ளிவாசல் ஜமாத் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு தீபாவளி வாழ்த்து கூறினர்.

மத வேற்றுமைகளை மறந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நகர் நலச்சங்க செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News