திருச்சி மாவட்டத்தில் மக்கள் குறைகளை தெரிவிக்க வாட்ஸ் அப் எண் வெளியீடு
திருச்சி மாவட்டத்தில் பொது மக்கள் குறைகளை தெரிவிக்க வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டு உள்ளது.;
தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி ஒவ்வொரு திங்கட்கிழமைகளில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வந்த நேரடியாகபொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கும் மக்கள் குறை நாள் கூட்டம் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருச்சி மாவட்டத்தில், பிரதிவாரம் தோறும் திங்கட்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, பொதுமக்கள் தங்களது மனுக்களை 94454 61756 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் மற்றும் மாவட்ட கலெக்டர் அலு வலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியிலும் அளிக்கலாம்.
பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக் கள் பெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக் கப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.