திருச்சி மாநகராட்சி சார்பில் மறுசுழற்சி கைவினை பொருட்கள் கண்காட்சி
திருச்சி மாநகராட்சி சார்பில் மறுசுழற்சி கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.;
75-வது சுதந்திர அமுதப்பெருவிழாவை முன்னிட்டு திருச்சி மாநகராட்சியில் மறுசுழற்சி கைவினை பொருள் கண்காட்சி இன்று நடைபெற்றது. வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் குப்பை கழிவுகளை கொண்டு தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.
கைவினை கலைஞர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆகியோரால் அமைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட ஸ்டால்களில் இந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியை நகர பொறியாளர் அமுதவல்லி, செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
இதில் உதவி ஆணையர்கள் சண்முகம், பிரபாகரன், கண்ணன், திருஞானம், செல்வ பாலாஜி, அக்பரலி மற்றும் நேரு இளையோர் மைய மாவட்ட இளைஞர் அலுவலர் ஸ்ருதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.