திருச்சியில் ரூ.5 ஆயிரம் பணத்துடன் சென்ற வீட்டு புரோக்கர் திடீர் மாயம்
திருச்சியில் ரூ.5 ஆயிரம் பணத்துடன் சென்ற வீட்டு புரோக்கர் திடீர் என மாயமானதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.;
திருச்சி மதுரை ரோடு ஜீவாநகர், கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 49). இவர் வீட்டு புரோக்கர் ஆக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக சரியான முறையில் வேலை எதுவும் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 27-ந்தேதி வீட்டில் இருந்து இ.பி. பில் கட்டி விட்டு வருவதாக சொல்லி விட்டு ரூ.5 ஆயிரத்துடன் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி கவிதா (வயது 45) கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்கு பதிவு செய்து மாயமான சரவணனை தேடி வருகின்றார்.