திருச்சியில் வேனில் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் இருவர் கைது. 750 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை.;

Update: 2021-10-18 04:00 GMT
ரேஷன் அரிசி (கோப்பு படம்)

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள போலீஸ் சோதனை சாவடி எண் 2-ல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற வேன் ஒன்றை மடக்கி சோதனையிட்ட போது அதில் 18 மூட்டைகளில், 750 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து வேனுடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேசன் கொண்டு சென்றனர். மேலும், வேனில் வந்த அரியமங்கலத்தை சேர்ந்த அக்பர்அலி (வயது 61), இ.பி.ரோடு தேவதானத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 32) ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், குடும்ப அட்டைகளுக்கு  வினியோகிக்கப்பட்ட ரேஷன் அரிசியை மலிவு விலையில் வாங்கி வேனில் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News