மழை பாதிப்பு: திருச்சி ஜே.கே.நகரில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.ஆய்வு

திருச்சி ஜே.கே.நகரில் மழை நீர் சூழ்ந்த வீடுகளை எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-11-09 08:08 GMT

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொட்டப்பட்டு, புதுக்கோட்டை மெயின் ரோடு, ஜீவா தெரு, இந்திரா நகர், ஜே.கே.நகர் அமராவதி தெரு, சிந்து தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் திருச்சியில் பெய்த கனமழையால், மழைநீர் புகுந்து உள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதையடுத்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் சேறும், சகதிகளுக்கிடையில் நடந்து சென்று அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். அவருடன் மாநகராட்சி நிர்வாக பொறியாளர். சிவபாதம், உதவி ஆணையர் தயாநிதி, உதவி செயற்பொறியாளர். பாலசுப்ரமணியம், உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார அலுவலர் தலைவிரிச்சான், கலைஞர் நகர் பகுதி பொறுப்பாளர் மணிவேல், மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News