திருச்சி பஞ்சப்பூரில் புறக்காவல் நிலையம் அமைக்க போலீஸ் கமிஷனர் ஆய்வு

திருச்சி பஞ்சப்பூரில் புதிய பஸ்நிலையம் அருகே புறக்காவல் நிலையம் அமைய இடத்தை போலீஸ் கமிஷனர் ஆய்வு செய்தார்.;

Update: 2021-12-19 09:08 GMT

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன்.

தமிழகத்தின் மையப்பகுதியாக உள்ள திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ்நிலையம் நிலையம் அமைக்கப்பட உள்ளது. தற்போது இதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், புதிய பஸ் நிலைய பகுதியில் முன்னேற்பாடு பணிகளில் திருச்சி மாநகர காவல்துறையும் ஈடுபட தொடங்கி உள்ளது. திருச்சி மாநகர எல்லையான எடமலைப்பட்டிபுதுார் கோரையாற்று பாலத்தையொட்டி சோதனைச் சாவடிஎண்: 2 உள்ளது.

புதிய பஸ்நிலையம் பஞ்சப்பூரில் அமைய உள்ளதால் இந்த சோதனைச்சாவடி இடமாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதற்காக பஞ்சப்பூரில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்திற்கு அருகாமையில் சோதனைச்சாவடி அமைக்கவும், புதிதாக புறக்காவல் நிலையம் கட்டவும் இடம் தேர்வு செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் பஞ்சப்பூரில் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News