திருச்சி புத்தக கண்காட்சியில் இரண்டு நூல்கள் வெளியீடு

திருச்சி புத்தக கண்காட்சியில் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன.

Update: 2023-12-04 11:55 GMT

திருச்சி புத்தக கண்காட்சியில்  இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டது.

திருச்சி ஜோசப் கல்லூரி வளாகத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இந்த புத்தக கண்காட்சி அரங்கு எண் 8, ல் அமைக்கப்பட்டிருந்த தமிழ்த்தேசிய நூல்கள் அரங்கம் சார்பில்  கால வெள்ளம், மற்றும் செறிவூட்டப்பட்ட அரிசித் திணிப்பு , தமிழர் கிராமங்கள் அழிப்பு ஆகிய  இரண்டு நூல்கள்  பன்மைவெளி அரங்கில் நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்விற்கு தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கவித்துவன்  தலைமை தாங்கினார். கி. வெங்கட்ராமன் எழுதிய செறிவூட்டப்பட்ட அரிசித் திணிப்பு - தமிழர் கிராமங்கள் அழிப்பு என்ற நூலை தமிழ்த்தேசியப் பேரியக்க துணைத் தலைவர் முருகன் வெளியிட மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளர் கேசி நீலமேகம், தண்ணீர் அமைப்பு ஆநிறைச்செல்வன்,உழவன் அங்காடி,செந்தில் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து ம.இலட்சுமி எழுதிய கால வெள்ளம் என்ற நூலை கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் வெளியிட ஆருத்ரன் நிறுவன நிர்வாக இயக்குனர் முருகன்,ம.பி.அனுராதா,நவீனா தியாகராசன்,அரசெழிலன்,திலகவதி இலக்குவன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Tags:    

Similar News