திருச்சி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

திருச்சி மாவட்டத்தில் குற்றவழக்குகளில் ஆஜராவதற்காக அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.;

Update: 2021-10-15 07:20 GMT

திருச்சி நீதிமன்றம் (கோப்பு காட்சி)

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. தலைமையில் புதிய அரசு அமைந்து உள்ளது. இந்த புதிய அரசு அமைந்த பின்னர் முதலில் சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டிற்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து தற்போது திருச்சி மாவட்டத்திற்கு அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி திருச்சி மாவட்ட தலைமை அரசு வழக்கறிஞராக (குற்றவியல்) சவரிமுத்து நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாவட்டம் முழுவதும் உள்ள குற்ற வழக்குகள் தொடர்பாக போலீசார் தரப்பில் ஆஜராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல அரசு பிளீடர் ஆக மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சிவில் தொடர்பான வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராகி வாதாடுவார்.

இவர்கள் தவிர திருச்சி மாவட்ட குற்றவியல் கூடுதல் வழக்கறிஞராக கவியரசன், துறையூர் கூடுதல் வழக்கறிஞராக ஜெயராஜ், லால்குடி கோர்ட் வழக்கறிஞராக தாமோதரன் லால்குடி கூடுதலாக மதிவாணன், மணப்பாறை கூடுதல் வழக்கறிஞராக அரவிந்தன் ஆகியோர் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் தவிர துறையூர் கோர்ட்டிற்கு சந்திரமோகன், முசிறி கோர்ட்டிற்கு சப்தரிஷி, மணப்பாறைக்கு முரளிகிருஷ்ணன், அழகிரி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News