திருச்சி ஜெயில் கார்னர் சாலையை உடனடியாக சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை

திருச்சி ஜெயில் கார்னர் சாலையை உடனடியாக சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Update: 2023-10-11 17:16 GMT

திருச்சி ஜெயில் கார்னர் -பொன்மலைப்பட்டி சாலையின் தற்போதைய தோற்றம்.

திருச்சி நகரின் பல பகுதிகளிலும் தற்போது பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்டு, இதற்காக சிதைக்கப்பட்ட சாலைகளை புதிதாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக விமான நிலையம், கே. கே.நகர் மற்றும் காஜாமலை பகுதியில் அதிகமான சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இப்படி சீரமைக்கப்படும் சாலைகளுக்காக மக்கள் படும் அவதி கொஞ்சம் நஞ்சமல்ல. சாலை அமைக்கும் பணியை தொடங்கும் காண்டிராக்டர்கள் அதனை உடனடியாக முடிப்பது இல்லை. பல நாட்கள் கிடப்பில் போட்டு விடுகிறார்கள்.

திருச்சி ஜெயில் கார்னரில் இருந்து பொன்மலை மலையடிவாரம் செல்லும் சாலை தற்போது அகலப்படுத்தும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்தொடங்கப்பட்டது. இதற்காக நன்றாக இருந்த சாலையின் நடு பகுதியை ஜேசிபி மூலம் பிராண்டி எடுத்து கொத்தி குதறி போட்டு இருக்கிறார்கள்.

கடந்த பதினைந்து தினங்களுக்கு மேலாக இப்படி கொத்தி குதறி போட்ட  சாலையில் தொடர்ந்து பணிகள் நடைபெறவில்லை. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறி விழும் அபாயமும், பெண்கள் அவ்வழி செல்ல அச்சப்படுகின்றனர். வாகனத்தின் டயரும் நிலை குலைந்து போகிறது.

வேலை ஆரம்பிக்கும் இரண்டு நாள் முன்பாக செய்ய வேண்டிய வேலையை இப்படி 15 நாட்கள் மேலே ஆகியும் வேலை ஆரம்பிக்காமல் அலட்சியமாக இருப்பதும், பொது மக்கள் அவதி படுவதை கண்டு கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News