ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2024-08-29 16:00 GMT

திருச்சியில் ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் மாவட்டத் துணைத் தலைவர் எம்ஆர் முருகன் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தோழர் த.இந்திரஜித், ஏஜடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் எம் சி. மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, சிபிஐ மாவட்ட செயலாளர்கள் சிவா,மாவட்ட நிர்வாகிகள் ஜனசக்தி உசேன் ,முருகேசன் ,சுரேஷ் முத்துசாமி, பழனிச்சாமி, அப்துல் ஷெரிஃப் ,அப்பாஸ் உள்ளிட்டவர் உரையாற்றினர். மணிகண்டன் , சுந்தர்ராஜ், சையது உசேன் ,சேக் தாவுத், நிஜாமைதீன் ,சாகுல் அன்பழகன் ,துரைராஜ்,ஜெயபால், முத்தழகு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷமிட்டனர்

திருச்சி விமான நிலையத்திற்குள் ஆட்டோ சென்று பயணிகளை இறக்கி விடும் நடைமுறையை தடுக்காதே

மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தாதே

ஆட்டோ தொழிலாளர்களை சுரண்டி பிழைக்கும் ஓலா, உபர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை தடை செய்

ஆன்லைன் அபராதத்தை கைவிடு

நலவாரிய ஓய்வூதியத்தை 9 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கிடு

ஆட்டோ தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ பிஎப் திட்டத்தை செயல்படுத்திடு

மினிபஸ் இயக்கத்தை அரசே ஏற்று நடத்திடு

வீடு இல்லாத ஆட்டோ தொழிலாளிகளுக்கு வீடு வழங்கிடு

எப் சி கட்டணத்தை குறைத்திடு ஆந்திரா அரசாங்கம் போல்ஆட்டோ வாங்க ரூபாய் 10 ஆயிரம் மானியம் வழங்கிடு

பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கி வரும் மானிய ஆட்டோவில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்திடு என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News