திருச்சியில் மின்சாரம் தாக்கி இறந்த தொழிலாளி உடலை வாங்க மறுத்து போராட்டம்

திருச்சியில் மின்சாரம் தாக்கி இறந்த தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-09-11 13:17 GMT

திருச்சி வடக்கு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் டேவிட் ரீகன்.இவர் கட்டிட தொழிலாளி.சம்பவத்தன்று ரீகன் திருச்சி கருமண்டபம் நியூ ஆல்பா நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு வேலை பார்க்க சென்றிருந்தார்.இந்த நிலையில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த போது ரீகன் எதிர்பாராத விதமாக எலக்ட்ரிக்கல் வயரை மிதித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில மின்சாரம் தாக்கி டேவிட் ரீகன் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கண்டோன்மென்ட் போலீசார் விரைந்து சென்று டேவிட் ரீகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்து போன ரீகனுக்கு மனைவி மற்றும் நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர்.

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி ரீகன் சாவு விகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உயர் மின்சார கம்பிகளுக்கு கீழ் வீடு கட்ட முறைகேடாக கட்டிட அனுமதி வழங்கிய மாநகராட்சி அதிகாரி கள் மற்றும் மின் இணைப்பு வழங்கிய மின்வாரியஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். 4 பெண் குழந்தைகள் வைத்துள்ள இறந்து போன கட்டிட தொழிலாளி ரீகன் குடும்பத்திற்கு ரூ25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், ரீகன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரி திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கிடங்கில் உள்ள ரீகன் உடலை வாங்க மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் உறவினர்கள் சார்பில் அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினார்கள்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

Tags:    

Similar News