திருச்சியில் இளம் சிறார்களின் பிரச்சினைகளை கையாள்வது குறித்து பயிற்சி
திருச்சியில் இளம் சிறார்களை கண்காணித்து அவர்களது பிரச்சினைகளை கையாள்வது குறித்த பயிற்சி காவல் ஆணையர் தலைமையில் நடந்தது.;
திருச்சி மாநகரம், கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் சிறார் நீதி குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் 2015 இன் பிரிவு 107-இன் படி சட்டத்தின் முன் முரண்படும் இளம் சிறார்களை கண்காணித்தும் அவர்களது பிரச்சினைகளை கையாள்வது பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டு2015-ல் உள்ள சட்டசீர்த்திருத்தங்களை பற்றியும் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன் இன்று நடைபெற இந்த பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், கூடுதல் துணைஆணையர்,உதவிஆணையர்கள்,மகளிர்காவல்நிலையஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் பங்கேற்றனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் நன்னடத்தை அலுவலர் (மாவட்ட சட்ட உதவி மையம்), குழந்தைகள் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு இந்த பிரிவில் உறுப்பினர்களாக குழந்தைகள் நலத்துறையில் நியமிக்கப்பட்டனர்.