திருச்சியில் 8-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருச்சியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் எட்டாம் தேதி நடப்பதால் கலந்து கொண்டு பயன் பெற கலெக்டர் அழைப்பு வித்துள்ளார்.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகின்ற 8-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் தொழிற்பயிற்சி (டர்னர், வெல்டர், பிட்டர்) முடித்த 18 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ் நகல், சுய விவரக் குறிப்பு, ஆதார் அட்டை நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் பங்கேற்குமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் சு.சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.