தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக முதல்வருக்கு நன்றி
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து உள்ளது.;
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் மற்றும் திருச்சி மாவட்ட செயலாளர் நீலகண்டன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாட்டின் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 1-1 -2022 முதல் வழங்கப்படும் என்று அறிவித்தபடியே அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கி இருக்கின்ற தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .போராட்ட காலத்தை பணிகாலமாக மாற்றி தாங்கள் பிறப்பித்த ஆணையை தொடர்ந்து அகவிலைப்படி மற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு கலைஞர் போல அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்புக்கு உள்ளம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் மதிக்கின்ற அரசாக அவர்களது பணியை பாராட்டுகின்ற அரசாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது. தேர்தல் அறிக்கையில் தாங்கள் தெரிவித்துள்ள நீண்ட நாள் மற்றும் வாழ்வாதார கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை சரி செய்தல் ஆகிய அறிவிப்பை விரைவில் வெளியிட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.