திருச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

15-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினர் திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-12-20 16:30 GMT

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் 15-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வழியுறுத்தி இன்று தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு பேரணி நடத்தி மாவட்ட ஆட்சித் தலைவர்  அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க கூட்டுறவு கடன் சங்க அனைத்து பணியாளர்கள் மற்றும் நியாய விலைக்கடை பணியாளர்கள் உட்பட ஏராளமோனோர் இன்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறிதுநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நிர்வாகிகள் கலெக்டரிடம் 15 அம்ச கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News