எர்ணாவூர் நாராயணனுக்கு பனைத்தொழிலாளர் நல சங்க தலைவர் வாழ்த்து
Trichy News Tamil - தமிழ்நாடு பனை தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணனுக்கு பனைத்தொழிலாளர் நல சங்க தலைவர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.;
Trichy News Tamil - தமிழ்நாடு பனைத்தொழிலாளர் நல வாரிய தலைவராக எர்ணாவூர் நாராயணன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தமிழ்நாடு பனைத்தொழிலார் நலசங்க தலைவர் வழக்கறிஞர் திருச்சி.ப. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். சென்னைக்கு சென்று எர்ணாவூர் நாராயணனுக்கு பொன்னாடை அணிவித்த பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழகத்தில்ஆட்சி மாற்றத்தை நிர்ணயிக்கும் பெரிய சமுதாயமாகிய நாடார் சமுதாயத்தில் அடித்தட்டு மக்களாக வசிக்கும் பனைத்தொழிலாளர்களுக்கு பலன் கிடைத்திட துவக்கி வைத்த நலவாரியமே தமிழ்நாடு பனைத்தொழிலாளர் நலவாரியம்.தமிழ்நாடு பனைத்தொழிலாளர் நல வாரியத்தலைவராக எர்ணாவூர் நாராயணனை நியமித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டு உள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2