முதல்வர் வருகை தொடர்பாக திருச்சியில் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்
Today Political News in Tamil - வருகிற 26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை தொடர்பாக திருச்சியில் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
Today Political News in Tamil - தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் வருகிற 26-ம் தேதி திருச்சிக்கு வருகிறார். முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட கதவணையை திறந்து வைக்கிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.முதல்வர் வருகை தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி, மகளிர் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2