திருச்சி சங்கிலியாண்டபுரம், தில்லைநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
திருச்சி சங்கிலியாண்டபுரம், தில்லைநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர் அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதையொட்டி அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரெயில் நகர், நேருஜி நகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், ராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர், சக்தி நகர், ராஜப்பா நகர், எம்.ஜி.ஆர். நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகர் ஒரு பகுதி, மேலகல்கண்டார்கோட்டை, கீழகல்கண்டார்கோட்டை, வெங்கடேஷ்வரா நகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகர், செந்தண்ணீர்புரம், காட்டூர், திருநகர், நத்தமாடிபட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மன்னார்புரம் மின் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் திருச்சி தில்லைநகர் பிரிவுக்குட்பட்ட தில்லைநகர் கிழக்கு பகுதிகளான தில்லைநகர் முதல் தெரு முதல் 7-வது தெரு வரை, தில்லைநகர் கிழக்கு விஸ்தரிப்பு, சாஸ்திரிரோடு முதல் தெரு, கோட்டை ஸ்டேஷன் ரோடு, வாமடம், பாலக்கரை பிரிவுக்குட்பட்ட சின்னசாமிநகர், ஆழ்வார்தோப்பு, கே.எம்.நகர், ஸ்டீல்தோப்பு மற்றும் பீமநகர் ஆகிய பகுதிகளில் உயரழுத்த மின் பாதைகளில் பழைய மின் கம்பிகளை அகற்றிவிட்டு அதிக திறனுடைய புதிய மின் கம்பிகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மேற்கண்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.