திருச்சி பொன்னகர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

திருச்சி பொன்னகர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-03-16 03:48 GMT

திருச்சி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாசம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி நகரிய கோட்டம் பொன்னகர் தென்னூர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பழைய மின் கம்பிகளை அகற்றி விட்டு புதிய மின் கம்பிகள் மற்றும் பணி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை பொன்னகர் பிரிவுக்குட்பட்ட கலெக்டர் ஆபீஸ் ரோடு வலதுபுறம், மின்வாரிய அலுவலகம் முதல் பிரபு நர்சிங் ஹோம் வரை பொன்னகர் முதல் தெரு, இரண்டாம் தெரு ,ஒன்பதாம் தெரு, 10ஆம் தெரு, 11ஆம் தெரு பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

இதேபோல் தென்னூர் பிரிவுக்குட்பட்ட புத்தூர் நால் ரோடு முதல் அருணா தியேட்டர் வரை உள்ள பகுதியிலும் உயர் அழுத்த மின் பாதையில் பழைய கம்பிகளை மாற்றி விட்டு அதிக திறனுடைய புதிய மின் கம்பிகள் மாற்றப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் மின் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது.

இவர் அதில் கூறப்பட்டுள்ளது

Tags:    

Similar News