திருச்சி மாவட்டம் சமயபுரம், லால்குடி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
திருச்சி மாவட்டம் லால்குடி, சமயபுரம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.;
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் பூவாளுர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (23ம் தேதி) காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மணக்கால், ஜெ.ஜெ.நகர், சாந்திநகர், பூவாளூர், பெருவளநல்லுார், வெள்ளனூார், நன்னிமங்கலம், அன்பில், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், ரங்கராஜபுரம், ஆதிகுடி, கொன்னைக்குடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, காட்டூர், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.
அதே போல சமயபுரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (23-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சமயபுரம், வெங்கங்குடி, வ.உ.சி நகர், பூங்கா, எழில்நகர், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லுார், இருங்களூர், கல்பாளையம், மேலசீதேவி மங்கலம், புரத்தாக்குடி, கொணலை, கரியமாணிக்கம், எதுமலை, திருவெள்ளறை, பூனாம்பாளையம், கன்னியாக்குடி, வலையூர், பாலையூர், ஸ்ரீபெரும்புதுார், கூத்துார், நொச்சியம், பளூர், பாச்சூர், திருவாசி, அழகிய மணவாளம், குமரகுடி, திருவரங்கப்பட்டி, கோவர்த்தகுடி, பனமங்கலம், எடையப்பபட்டி, அய்யம் பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்துார், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆயக்குடி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.