முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு

திருச்சி மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட ஒதுக்கீடு.;

Update: 2021-12-11 04:45 GMT

திருச்சி மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட ஒதுக்கீடு.

திருச்சி மாவட்டத்தில் அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி களில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பிட திருச்சி மாவட்டத்துக்கு தமிழ் -2, ஆங்கிலம் -6, உயிரியல்-1, வரலாறு-8, பொருளியல்-2, வணிகவியல்-17 என மொத்தம் 36 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் மூலமாக சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் வாயிலாக சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. மேலும் அதில், நியமனம் செய்யப்பட்ட தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு ஊதியம் குறித்து ஆணையரின் நிதி ஒதுக்கீடு ஆணை பெறப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News