திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்
திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு பொங்கல் பரிசு தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.;
சென்னையில் இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் முழு கரும்பு வழங்கினார்.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்கள். திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் முழு கரும்பினை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், மாநகராட்சி முன்னாள் துணைமேயர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.