திருச்சியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு திருச்சியில் நடந்தது.;
தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பொறுப்பாளர் நெல்லையப்பன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக கழக பொதுச் செயலாளர் டாக்டர் பிரிசில்லா பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து நடந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட செயலாளராக பாலகங்காதரன் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில பொறுப்பாளர் சாந்தகுமாரி வரவேற்றார். முடிவில் மலைக்கோட்டை பகுதி செயலாளர் ஜூஸ் சுப்ரமணி நன்றி கூறினார்.