திருச்சி மாவட்டத்தில் போலீஸ் பறிமுதல் செய்த வாகனங்கள் பகிரங்க ஏலம்
திருச்சி மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகிற 7-ம் தேதி பகிரங்க ஏலம் விடப்படுகிறது.;
திருச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வரும் 7-ம் தேதி ஏலம் விடப்பட உள்ளன. திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற உள்ள ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் கோர விரும்புவோர் இருசக்கர வாகனங்களுக்கு டெபாசிட் தொகை ரூ.2 ஆயிரம், நான்கு சக்கர வாகனங்களுக்கு டெபாசிட் தொகை ரூ.20 ஆயிரம் செலுத்த வேண்டும். ஏலத்தொகையுடன் தனியாக ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும். 7-ம் தேதிக்கு முன்பாக ஆயுதப்படை வளாகத்தில் வாகனங்களை பார்வையிடலாம் என திருச்சி எஸ்.பி.சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.