திருச்சி மத்திய சிறை டி.ஐ.ஜி.யாக ஜெயபாரதி பொறுப்பேற்பு

திருச்சி மத்திய சிறை டி.ஐ.ஜி.யாக ஜெயபாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்; சூப்பிரண்டாக செந்தில்குமார் பொறுப்பேற்றார்.

Update: 2021-11-20 06:15 GMT

ஜெயபாரதி

தமிழகத்தில் திருச்சி, சென்னை புழல், கோவை, மதுரை  உள்பட 9 மாவட்டங்களில் மத்திய சிறை உள்ளது. திருச்சி மத்திய சிறையில் டி.ஐ.ஜி. மற்றும் சூப்பிரண்டு பணியில் உள்ளனர்.

இந்நிலையில்,  திருச்சி மத்திய சிறை டி.ஐ.ஜி. கனகராஜ், சென்னை மண்டலத்துக்கு பணியிடம் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக வேலூர் டி.ஐ.ஜி.ஜெயபாரதி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் திருச்சி சிறை சூப்பிரண்டு ஊர்மிளா, கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு செந்தில்குமார், திருச்சி மத்திய சிறைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவர்களில் சூப்பிரண்டு செந்தில்குமார் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். டி.ஐ.ஜி. ஜெயபாரதி, ஏற்கனவே திருச்சி மகளிர் சிறை சூப்பிரண்டாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News