திருச்சியில் நடந்து வரும் புத்தக திருவிழாவில் பங்கேற்ற கவிஞர் அறிவுமதி

திருச்சியில் நடந்து வரும் புத்தக திருவிழாவில் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி பங்கேற்று நூல்கள் வெளியி்ட்டார்.

Update: 2024-10-04 16:45 GMT

திருச்சி புத்தக திருவிழாவில் பங்கேற்ற கவிஞர் அறிவுமதி.

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி  மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. காலை முதல் இரவு வரை நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் தினமும் மாலை நேரங்களில் சிறப்பு விருந்தினர்கள் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருச்சி புத்தகத் திருவிழாவில், திருச்சிராப்பள்ளி பெண் எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழா அரங்கு எண்: 177 & 178 இல் நடைபெற்றது. "எங்கும் சுதந்திரம் வேண்டும்"கவிஞர் இரா. தங்கப்பிரகாசி, நிறுவனர் சிரா பதிப்பகம். "சிந்தனையில் சிதறிய தேன் துளிகள்", கவிஞர் ப. ர. சாய் மீனாஷி, "தேவையின் தேடல்கள்", கவிஞர் சு. இவான் கேத்தரின் ஏஞ்சலினா நூல்கள் வெளியிடப்பட்டன. முனைவர் தமிழ்மாமணி பா. ஸ்ரீராம் வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்விற்கு இலக்கியப் பேரொளி கேத்தரின் ஆரோக்கியசாமி, தலைமை தாங்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட பாடலாசிரியர் விஞர் அறிவுமதி கலந்து கொண்டு  நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். கவிஞர் அறிவுமதி நூல்களை வெளியிட அவற்றை கவிஞர் தனலெட்சுமி, மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், கவிஞர் கோவிந்தசாமி, லயன் முகம்மது ஷஃபி , திருக்குறள் முருகானந்தம், திருவள்ளுவர் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள் .

கவிஞர் சுமித்ராதேவிமாதவன், இணைச்செயலாளர், நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிரா இலக்கியக் கழகம் நிர்வாகிகள்உறுப்பினர்கள், கவிஞர்கள் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், சான்றோர்கள், நண்பர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News