திருச்சியில் பிளஸ்-1 படித்து வந்த மாணவி திடீர் மாயம்
திருச்சியில் பிளஸ் -1 படித்து வந்த மாணவி திடீர் என மாயமானது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி உறையூர் பாரதி நகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர் வெளியூரில் உள்ள மூத்த மகளை பார்ப்பதற்கு கடந்த வாரம் தனது மனைவியுடன் மற்ற 2 மகள்களை வீட்டில் விட்டு விட்டு சென்றார். நேற்று முன்தினம் திரும்பி வந்து பார்த்தபோது, பிளஸ் 1 படித்து வந்த 19வயது மகளை காணவில்லை. உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து பாலமுருகன் அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.