திருச்சியில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 4 பேர் ஆயுதங்களுடன் கைது

திருச்சியில் கொள்ளையடிப்பதற்காக ஆயுதங்களுடன் வந்த 4 கொள்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-14 17:07 GMT

திருச்சி எடமலைப்பட்டி புதுார் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 24). இவர் மீது பூட்டிய வீட்டின் கதவை உடைத்து திருடிய வழக்குகள் உள்ளதால் ஹவுஸ் பிரேக்கிங் முருகன் என்று போலீசார் அழைப்பது வழக்கம்.

இவரது வீட்டில் அடையாளம் தெயாத சிலர், கடந்த சில நாட்களாக முகாமிட்டு இருப்பதாக திருச்சி தனிப்படை போலீசாருக்கு ரகசியதகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் முருகன் வீட்டிற்கு வந்த இளைஞர்களை சுற்றி வளைத்தனர்.

இதில் சிக்கிய 4பேரிடம்விசாரணை நடத்தியதில் அவர்கள்  லால்குடிஸ்ரீராம் (வயது 24), கன்னியாகுமரிஸ்டீபன் (வயது 35), மதுரைஅம்ஜத்கான் (வயது 23) மற்றும் ஒருவர்  என்பது தெரிய வந்தது. அவர்களிடம்இருந்து பட்டா கத்தி, கதவை நெம்பிஉடைக்க கூடிய நெம்புகோல்உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவர் மீதும் கொள்ளை வழக்குகள் உள்ளன.

மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்த நான்கு பேரும் நண்பர்களாகியுள்ளனர். தற்போது எடமலைப்பட்டி புதூர் முருகன்வீட்டில் இருந்து கொண்டு பெரிய கொள்ளை சம்பவம் ஒன்றுக்காக திட்டம் தீட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News