சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் ஐ.ஜி.யிடம் மனு

சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.யிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2022-05-12 12:42 GMT

சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்க வந்தனர்.

திருச்சி அருகே உள்ள தாயனூரை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் மற்றும் சமூக நீதிப் பேரவை செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் இன்று திருச்சி மத்திய மண்டல போலீஸ் அலுவலகத்திற்கு வந்தனர். மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணனிடம் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர் .அந்த மனுவில் கடந்த 1ஆம் தேதி தாயனூர் ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் ஊராட்சி செயலரிடம் நான் சில கேள்விகளை எழுப்பினேன். அதற்கு ஊராட்சி தலைவியான தேவியின் கணவர் கிருஷ்ணமூர்த்தி தான் பதில் அளித்தார். இதற்கு நான் ஆட்சேபம் தெரிவித்தேன். ஊராட்சித் தலைவர் தான் பதிலளிக்க வேண்டும் என்று கூறினேன். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது .இது தொடர்பாக நான் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் புகாரை அவர்கள் முழுமையாக விசாரிக்க வில்லை.

அங்கு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் என்பவர் என்னை சாதிப்பெயரை சொல்லி திட்டினார். ஆதலால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News