அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்விக்கு அனுமதி வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்விக்கு அனுமதி வழங்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2022-05-10 12:01 GMT

விமன் இந்தியா மூமெண்ட்ஸ் அமைப்பினர் மனு அளிக்க வந்தனர்.

விமன் இந்தியா மூமென்ட்ஸ் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது. இந்த அமைப்பின் மாவட்ட தலைவர் மூமினாபேகம் தலைமையில் அளிக்கப்பட்ட அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி காட்டூர் பாப்பா குறிச்சியில் அரசு ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆங்கில வழிக் கல்வி அனுமதி அளிக்கப்பட்டது.

இதன் பலனாக அங்கு பயின்ற மாணவ மாணவிகள் 2019ஆம் ஆண்டு வரை இரண்டு பேட்ச் முடித்து சென்றனர். இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக இருந்தவர் போதிய ஆசிரியர்கள் இல்லை என காரணம் கூறி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வகுப்பு களுக்கான ஆங்கில வழிக் கல்வியை ரத்து செய்துவிட்டார். இதனால் அங்கு மாணவிகள் ஆங்கில வழி கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

இதுதொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு இறுதியில் முதல் அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை .ஆதலால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மீண்டும் இந்த பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியை தொடர அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News