இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேலிற்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டு
இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேலிற்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் திருச்சியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான் 3 திட்ட இயக்குனருமான வீர முத்துவேலிற்கு திருச்சியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
நிலவின் தென் துருவ ஆராய்ச்சி பணிக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் 14ம்தேதி சந்திரயான் 3 விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது.இந்த விண்கலத்தின் லேண்டர் பத்திரமாக நிர்ணயிக்கப்பட்ட நாளில் துல்லியமான நேரத்தில் நிலவில்தரை இறங்கி ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது. சந்திரயான் 3 விண்கலத்தின் திட்ட இயக்குனர் வீர முத்துவேல் தமிழகத்தை சேர்ந்த வீர முத்துவேல் ஆவார். அவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் பரிசு வழங்கி கவுரவித்தார்.
விஞ்ஞானி வீர முத்துவேல் திருச்சியில் படித்தவர். ரயில்வே தொழிலாளர் மற்றும் ரயில்வே தொழிற்சங்க தலைவர் பி.பழனி வேல் என்பவரின் மகன் ஆவார். விஞ்ஞானி ப.வீரமுத்துவேல் திருச்சிக்கு வருகை புரிந்த போது மக்கள் சக்தி இயக்கம், தண்ணீர் அமைப்பு மற்றும் ரயில்வே தொழிலாளர்கள் சார்பில் மாலை அணிவித்து , பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசுகள் வழங்கி வரவேற்கப்பட்டது.
இதில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம் ,ரயில்வே தொழிற்சங்க தலைவர்கள் ஐான்சன், விஜயகுமார், திருச்சி மாவட்ட எச்.எம்.எஸ். தலைவரும் கவுன்சிலருமான கோ.ரமேஷ், மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளர் ஆர். இளங்கோ, ஆர்.கே.ராஜா, நீ.வெங்கடேஷ், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார், கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.இந்த நிகழ்வில் விஞ்ஞானி ப.வீரமுத்துவேல் துணிப்பை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.