திருச்சி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 424 மனுக்கள்
திருச்சி மாவட்டத்தில் நடந்த பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 424 மனுக்கள் பெறப்பட்டது.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்று, இதர சான்றிதழ், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, நலத்திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், திருமண உதவித்தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 424 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் அம்பிகாபதி உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.